ADDED : நவ 25, 2026 07:00 PM
சின்னாளபட்டி: பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித் துறை சார்பில் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில ஹேண்ட்பால் போட்டிகள் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியில் நேற்று துவங்கியது.
இதற்கான துவக்க விழாவிற்கு மாநில ஹேண்ட்பால் கழக செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் திண்டுக்கல் ரஹமத்கனி, கள்ளக்குறிச்சி மோகன்செல்வம், பெரம்பலுார் கணேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் திலகம் வரவேற்றார்.
நாக்-அவுட் முறையில் நடக்கும் இப்போட்டிகளில் திண்டுக்கல், சேலம், மதுரை, கோவை, நீலகிரி, சென்னை, விருதுநகர், கரூர் உள்பட 38 மாவட்டங்கள், 2 விளையாட்டு விடுதிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. முதல் 3 நாட்கள் மாணவியருக்கும், நவ.,28 முதல் நவ.,30 வரை மாணவர்களுக்கும் போட்டிகள் நடக்கின்றன.
ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் பாரதிராஜா, அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆல்பிரட்யங், அபிஷேக் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
