தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாநில ஹேண்ட்பால் போட்டி

 மாநில ஹேண்ட்பால் போட்டி

 மாநில ஹேண்ட்பால் போட்டி


ADDED : ஜன 14, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: கோவையில் நடந்த மாநில ஹேண்ட்பால் போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவில் சின்னாளபட்டி மாணவர்கள் முதலிடம் வென்றனர்.

விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுாரியில் தேசிய இளைஞர் தின மாநில ஹேண்ட்பால் போட்டிகள் நடந்தது.

19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான சூப்பர் சீனியர் பிரிவில் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் வென்றனர். இதற்கான பாராட்டு விழா சின்னாளபட்டி பள்ளியில் நடந்தது. சேரன் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

பள்ளி முதல்வர் திலகம் முன்னிலை வகித்தார். பதக்கம் கோப்பை வென்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆல்பிரட்யங், பாரதிராஜா, அபிஷேக், உதவி தலைமை ஆசிரியர் வெண்ணிலா, உடற்கல்வி பயிற்சியாளர்கள் அசோக்குமார், செந்தில்குமார், ரஞ்சனி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us