தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பயணிகள் தள்ள வைத்து இயக்கப்பட்ட அரசு பஸ்

பயணிகள் தள்ள வைத்து இயக்கப்பட்ட அரசு பஸ்

பயணிகள் தள்ள வைத்து இயக்கப்பட்ட அரசு பஸ்


ADDED : செப் 27, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 04:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: பழநி பஸ் ஸ்டாண்டில் ஈரோடு செல்ல நின்றிருந்த அரசு பஸ் புறப்படும் நேரத்தில் திடீரென பழுதடைந்ததால் பயணிகள் பஸ்ஸை தள்ளிச் சென்று, பின் பஸ் இயக்கப்பட்டு சென்றனர்.

பழநி பஸ் ஸ்டாண்டில் நேற்று பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. நேற்று காலை ஈரோடு நோக்கி செல்ல அரசு பஸ் தயாராக நின்றிருந்தது. பயணிகள் ஏறிய பின், பஸ் புறப்பட்டது. அப்போது இன்ஜின் ஸ்டார்ட் ஆகாததால் பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டனர். பயணிகளை அரசு பஸ்சின் பின்புறம் இருந்து தள்ளச் செய்தனர். பஸ்சை தள்ளிய பயணிகளால் பஸ் ஸ்டார்ட் ஆகியது. அதன் பின் பஸ் ஈரோடு நோக்கிச் சென்றது. இதுபோல அடிக்கடி பழநிப் பகுதியில் பஸ் பழுதாகி நிற்பது வழக்கமாகி வட்டது. பழநியில் இருந்து ஈரோடு செல்லும் தொலைதுார பஸ் ஸ்டார்ட் ஆகாமல் பிரச்னை உடன் இயக்குவதால் பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us