தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழுதாகி நின்ற அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு

பழுதாகி நின்ற அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு

பழுதாகி நின்ற அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு


UPDATED : நவ 23, 2026 06:02 PM

ADDED : நவ 23, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:02 PM ADDED : நவ 23, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:

பழநியில் அரசு பஸ் பழுதாகி ரோட்டில் நின்றதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

கோவையில் இருந்து பழநி நோக்கி அரசு பஸ் வந்தது. மதியம் 1:15 மணிக்கு புது தாராபுரம் ரோடு ரெணகாளியம்மன் கோயில் நால்ரோடு சந்திப்பில் வந்தபோது, பஸ்சின் பின் சக்கரத்தில் பயங்கர சத்தம் கேட்டது. சுதாரித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.

பஸ் மேற்கொண்டு நகர முடியாத நிலையில் இருந்ததால் அதில் பயணித்த மக்கள் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்தே சென்றனர். முக்கிய ரோட்டில் பஸ் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை அனுப்பி வைத்தனர். இவ்வழியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us