ADDED : மார் 21, 2026 07:10 AM
அ நிறம் | அளவு
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் பகுதி யில் கால்நடைகளை தெருநாய்கள் கடிப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் கூறினர்.
பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, நால்ரோடு, பொருளூர், மேட்டுப்பட்டி, திருமலைகவுண்டன்வலசு ,சுற்றிய பகுதிகளில் ஆடுகள், பசு மாடுகள், செம்மறி ஆடுகளை விவசாயிகள் அதிகமாக வளர்த்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பதை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது மேற்கண்ட கிராம பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றி வருகின்றன. இப்பகுதியில் வீசப்படும் மாமிச கழிவுகளை உண்பதற்கு வரும் தெரு நாய்கள் அவ்வழியாக மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகளை கடிக்கின்றன என விவசாயிகள் தெரிவித்தனர். தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
