ADDED : பிப் 01, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஊரக வளர்ச்சித் துறையில், காலியாக உள்ள ஊராட்சி செயலர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசு அறிமுகப்படுத்திய டேப்ஸ் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது.
மாவட்டத் தலைவர் மகுடபதி தலைமை வகித்தார். செயலாளர் அருண்பிரசாத், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி, வருவாய் அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சுகந்தி, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் ராஜமாணிக்கம் பேசினர்.
இதில் சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்டப் பொருளாளர், முருகவல்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

