sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கூட்டுறவு நிலத்திற்கான போராட்டம் ஒத்திவைப்பு

/

 கூட்டுறவு நிலத்திற்கான போராட்டம் ஒத்திவைப்பு

 கூட்டுறவு நிலத்திற்கான போராட்டம் ஒத்திவைப்பு

 கூட்டுறவு நிலத்திற்கான போராட்டம் ஒத்திவைப்பு


ADDED : பிப் 28, 2026 07:27 AM

Google News

ADDED : பிப் 28, 2026 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 1983ல் 50 சென்ட் இடம் விலைக்கு வாங்கி கட்டடம் கட்டப்பட்டது.

இதே வளாகத்தில் 2022ல் 100 நாள் வேலையுறுதி திட்டத்தில் ரூ.16.46 லட்சத்தில் கட்டிய புதிய கட்டடத்திற்கு மின்இணைப்பு பெறும் நடவடிக்கைக்காக பட்டா நகல் பெற்ற போது 20 சென்ட் நிலம் குறைவாக இருந்தது கண்டறியபட்டது. 20 சென்ட் நிலம் அதே பகுதியை சேர்ந்த 2 பேரில் 2007-ல் பட்டாவாக மாறியிருப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி மனு தந்து தாசில்தார், ஆர்.டி.ஓ., விசாரணைகள் முடிந்து டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் கிடப்பில் இருந்தது. இப்பிரச்னையால் புதிய கட்டடம் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பயனற்று கிடக்கிறது.

அதிருப்தியான மக்கள் நிலத்தை மீட்க மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் சில நாட்களில் தீர்வு கிடைக்கும் என கூற போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.






      Dinamalar
      Follow us