ADDED : ஆக 23, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம்- கோவில்பட்டி மீனாட்சி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மரங்களை பராமரிக்கும் மரமே வரம் நிகழச்சி நடந்தது. பள்ளி முதல்வர் சத்யா தலைமை வகித்தார்.
நத்தம் லயன்ஸ் கிளப் தலைவர் பாண்டி,பொருளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மரக்கன்றுகளை பெற்று தற்போது வரை மரங்களை பராமரித்து வரும் மாணவர்களுக்கு பசுமை துாதுவர் பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. சந்தனம், வேம்பு உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.