தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 16, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், செப்.13

‘மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மத்திய பல்கலைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பி.சி., எம்.பி.சி., சீர்மரபின மாணவ, மாணவிகள் 2026 – 2027க்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்’ என கலெக்டர் துர்கா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகளில் கற்பித்தல் கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணங்களுக்காக ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை – 5, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை – -5, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். www.bcw.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மத்திய, மாநில அரசின் இதர கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவர்கள்  இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கல்வி  நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனத்தின் ஆளறிச் சான்றிதழுடன் பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். அக்.,31க்குள் புதுப்பித்தல் விண்ணப்பங்களும், புதிய விண்ணப்பங்களை நவ.,30க்குள் விண்ணப்பிப்பது அவசியம்., என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us