மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கலை நிகழ்ச்சிகள், போட்டிகளில் அசத்திய மாணவர்கள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கலை நிகழ்ச்சிகள், போட்டிகளில் அசத்திய மாணவர்கள்
ADDED : ஆக 16, 2026 01:16 AM

திண்டுக்கல்: 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். பள்ளி, கல்லுாரி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன.
திண்டுக்கல் காந்திஜி நகர் தினமலர் கிளை அலுவலகத்தில் நேற்று காலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கப்பட்டன. ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் கலெக்டர் துர்கா தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்ததுடன் சமாதானத்தை விளக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலுான்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து போலீஸ், தீயணைப்பு, ஊர்க்காவல்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 98 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துர்கா வழங்கினார். 69 காவலர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 198 அலுவலர்கள், பணியாளர்கள் 282 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.,சசிமோகன், எஸ்.பி.,ஜெயக்குமார், டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சாந்தி, ஆர்.டி.ஓ.,பழனிவேல், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயந்தி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சீலப்பாடி டி.ஜ.ஜி.,அலுவலகத்தில் சரக டி.ஜ.ஜி., சசிமோகன் தேசியக்கொடி ஏற்றினார். அலுவலர்கள், போலீசார் பங்கேற்றனர். எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றி போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் இளமதி தேசியக்கொடி ஏற்றினார். துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் பிரேம் ஆனந்த், பணியாளர்கள் பங்கேற்றனர்.
பழநி ரோடு வேளாண்மை பொறியியல் அலுவலகத்தில் இன்ஜினியர் நாகராஜன் கொடி ஏற்றினார். உதவி இன்ஜினியர்கள் குமணவேள், விஜயன் பங்கேற்றனர். இ.கம்யூ., அலுவலகத்தில் மூத்த நிர்வாகி வெள்ளைச்சாமி தேசியக்கொடி ஏற்றினார். மாவட்ட நிர்வாகி கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
காந்திஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர்த்தொட்டி அருகே நடந்த விழாவில் ஹோமியோபதி சிறப்பு டாக்டர் சிவசண்முகம் தேசியக்கொடி ஏற்றினார். ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் துவக்கப்பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் சின்னத்தம்பி தேசியக்கொடி ஏற்றினார். தாளாளர் நாகூர் ராஜா, தலைமை ஆசிரியர் இன்பென்சியா பங்கேற்றனர். சைவப்பெருமக்கள் பேரவை திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் ஆயுட்கால அறங்காவலர் மீனாட்சி சுந்தரம் கொடி ஏற்றினார். தலைவர் நல்லதம்பி, முன்னாள் தலைவர் சம்பந்தம்பிள்ளை, செயலாளர் சுப்பிரமணி பங்கேற்றனர்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை திருஉருவச்சிலை அமைப்புக்குழு சார்பில் திண்டுக்கல் - திருச்சி ரோடு குடைக்காரர் பெட்ரோல் பங்க் அருகே அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன் கொடி ஏற்றினார். செயலாளர் தனபாலன், கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.
காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளியில் லயன் சங்க நிர்வாகி சரவணன் தேசியக்கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் பாலாஜி சுப்பிரமணி, சங்க நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு மைய அலுவலகத்தில் மாநில இணைச்செயலாளர் சுப்பிரமணியம் கொடி ஏற்றினார். தலைவர் நாகராஜன், தென்னக ரயில்வே ஓய்வூதியர் சங்கம் ஜெகநாதர், அறக்கட்டளை நிர்வாகி கவியோவிய தமிழன் பங்கேற்றனர். கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் மாவட்ட ஆலோசகர் சஞ்சய்குமார் கொடி ஏற்றினார். தலைவர் திருப்பதி, கவுரவ ஆலோசகர் டால்டன் இனிப்புகள் வழங்கினர்.
கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வள்ளலார் பக்தர் அருணகிரி கொடி ஏற்றினார். மன்ற பொறுப்பாளர் சரவணன், மூத்தத்தலைவர் ராசு, நிர்வாகிகள் பங்கேற்றனர். மல்லிகை நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தலைவர் அழகர்சாமி தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் ரமேஷ்குமார், உறுப்பினர் கிருஷ்ணசாமி இனிப்பு வழங்கினர்.
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் கொடியேற்றினார். முன்னாள் ராணுவ வீரர் விசுவாசம், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் சார்பில் வெள்ளோடு புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியில் வட்டார தலைவர் செபஸ்தியார், தலைமை ஆசிரியை ஞானசெல்வம் கொடியேற்றினர். சங்க தலைவர் கஷ்மீர் அருண், உறுப்பினர் பீட்டர் யாகப்பன், மாவட்ட தலைவர் சாமி பங்கேற்றனர். மாணவர்களுக்கு புத்தகம் பரிசு, இனிப்புகள் வழங்கப்பட்டது.
காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் செயலாளர் நரசிங்க சக்தி கொடியேற்றினார். நிர்வாகிகள் முருகன், ராமலிங்கம் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முதல்வர் லதா ஏற்பாடுகள் செய்திருந்தார்.
அச்யுதா பள்ளியில் 14வது எம்.சி.சி., படை நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் அமிர்தராஜ் கொடியேற்றினார். பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி இனிப்புகள் வழங்கினர். தேசப்பற்றை உணர்த்தும் விதமாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதன்மை முதல்வர் சந்திரசேகரன், துணை முதல்வர் பிரபா, ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வடமதுரை: வடமதுரை ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., சீதாலட்சுமி தேசியக்கொடி ஏற்றினார். துணை பி.டி.ஓ.,க்கள் மாரியப்பன், சுமதி பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் நிருபாராணி கணேசன் கொடியேற்றினார். செயல் அலுவலர் பத்மலதா, துணைத்தலைவர் மலைச்சாமி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் இயக்குனர் சுப்பம்மாள், துவக்கப் பள்ளியில் அருள்மணி, குரு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் பிரபாகரன், பாரதி துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், துணை மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி கொடியேற்றினர்.
கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் கொடியேற்றினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் பங்கேற்றார். அய்யலுார் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் கொடியேற்றினார். செயல் அலுவலர் சூசை இன்ப ராஜேஷ் பங்கேற்றார்.
அ ய்யலுா ர் வனத்துறை அலுவலகத்தில் வனச்சரக அலுவலர் கணேஷ்பாண்டியன், துணை மின்நிலையத்தில் உதவி பொறியாளர் ராஜேஷ்குமார், ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் திருமாறன் கொடியேற்றினர்.
அய்யலுார் ரஞ்சித் மழலையர் துவக்கப்பள்ளியில் தாளாளர் முனியாண்டி கொடியேற்றினார். முதல்வர் மனோரஞ்சித் பங்கேற்றார். தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஸ்ரீதரன் கொடியேற்றினார். இயக்குனர் சாந்தி பங்கேற்றார்.
எரியோடு: எரியோடு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். செயல் அலுவலர் சையது அபுதாகிர் பங்கேற்றார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வினோதா, துணை மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் சிவராமன், கலைவாணி மழலையர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆபிரகாம் கொடியேற்றினர்.
தண்ணீர்பந்தம்பட்டி ஸ்ரீமகா வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் செயலாளர் ரேவதி கொடியேற்றினார். தாளாளர் சுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளர் லயோலா அருமை ராஜ், முதல்வர்கள் சத்தியவாணி, கார்த்திக், அந்தோணிதாஸ் பங்கேற்றனர்.
புதுரோடு இ.என்.பி., துவக்கப்பள்ளியில் தாளாளர் இளங்கோவன் கொடியேற்றினார். முதல்வர் ராமசந்திரபிரபு பங்கேற்றார்.
தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். தாளாளர் கிருஷ்ணவேணி பங்கேற்றார்.
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு வெற்றிலை நகர் அரிமா சங்கத்தில் தலைவர் வெங்கடேஸ்வரன், மின்வாரிய இளநிலை பொறியாளர் வாமணன் கொடியேற்றினர். முதன்மை நிர்வாகி திருமணி, செயலாளர் மனோகரன், பொருளாளர் ஆனந்த்பாபு பங்கேற்றனர்.
வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தீபா கொடியேற்றினார். எம்.எல்.ஏ., அய்யனார், உதவி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஆசிரியர்கள் கோபி, சபினாபேகம் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., ராஜ்மோகன் கொடியேற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சிதம்பரம் கொடியேற்றினார். செயல் அலுவலர் ஆஷா ராணி, துணைத்தலைவர் தர்மலிங்கம், தலைமை எழுத்தர் முருகேசன் பங்கேற்றனர்.
நகர கூட்டுறவு வங்கியில் முன்னாள் கூட்டுறவு துறை தணிக்கையாளர் காளிராம் கொடியேற்றினார். மேலாண்மை இயக்குனர் பாரிஷா, மேலாளர் வினோதினி, அலுவலர்கள் பங்கேற்றனர்.
சார தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் நாகரத்தினம் கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் பள்ளியில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். தாளாளர் கயல்விழி, செயல் தலைவர் சித்தார்த் பங்கேற்றனர்.
ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஈடன் கார்டன் குழும தலைவர் கென்னடி கொடியேற்றினார். தாளாளர் அருள்மாணிக்கம், செயலாளர் ரோஸ் சுமதி, மேலாண்மை இயக்குனர் ஜெயந்த் பங்கேற்றார். அரிமா சங்க தலைவர் தவபாண்டியன், செயலாளர் ஜெர்மன் ராஜா, துணைத்தலைவர் ஜான் பங்கேற்றனர்.
மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வத்தலக்குண்டு புதிய தலைமுறை ரோட்டரி சங்க தலைவர் கிருபாகரன் கொடியேற்றினார். பள்ளி தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ராமதாஸ், தலைமை ஆசிரியர் செல்வராணி, ஆசிரியர் சாவித்திரிதேவி பங்கேற்றனர்.
வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., மாணிக்கம் தேசியக்கொடி ஏற்றினார். கூடுதல் பி.டி.ஓ., கற்பகம் பங்கேற்றார். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மேகலா கொடியேற்றினார். செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், துணைத்தலைவர் சாகுல்ஹமீது பங்கேற்றார்.
தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேந்திரன் கொடியேற்றினார். துணை தாசில்தார்கள் ரமேஷ், பொன்னுச்சாமி, அலுவலர்கள் பங்கேற்றனர். போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., தர்மர் கொடியேற்றினார். சிறப்பு எஸ்.ஐ., இளங்கோ, போலீசார் பங்கேற்றனர்.
வேடசந்துார் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் லோகநாதன் கொடியேற்றினார். டாக்டர்கள் அபர்ணா, பூவிழி, சிவராஜ்தீன் பங்கேற்றனர். ஞான ஒளி பார்வையற்றோர், ஊனமுற்றோர் மறுவாழ்வு நல சங்கத்தில் அரிமா சங்கத்தலைவர் அழகுராஜா கொடியேற்றினார். தலைவர் காளியப்பன், ஓய்வு பெற்ற தனி தாசில்தார் சிவசுப்பிரமணியன் பங்கேற்றனர்.
பி.வி.எம்.,மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் சூடாமணி கொடியேற்றினார். முதல்வர் செந்தில்குமார், மாணவர்கள் பங்கேற்றனர். தாடிக்கொம்பு ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரம் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகி செந்தில்குமார் கொடியேற்றினார். தாளாளர் திவ்யா, இயக்குனர் லக்சித், மாணவர்கள் பங்கேற்றனர்.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமசாமி தேசியக்கொடி ஏற்றினார். மண்டல தாசில்தார்கள் அபிராமி, செல்வகுமார், சவுந்தரபாண்டி, அலுவலர்கள் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் ரகுராமன் கொடியேற்றினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துலட்சுமி, வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் கொடியேற்றினார். துணைத்தலைவர் முருகேசன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கே.சி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைவர் சுந்தரம் கொடியேற்றினார். செயலாளர் அண்ணாமலை, இயக்குனர் நாகராஜன், முதல்வர் சிவபாலன், மாணவர்கள் பங்கேற்றனர். முன்னாள் படைவீரர்கள் நல சங்கத்தில் முன்னாள் மேஜர் சவுந்தர பாண்டியன் கொடியேற்றினார். தலைவர் மணிகண்டன், செயலாளர் முருகானந்தம் பங்கேற்றனர்.
ஹெச்.என்.யு.பி.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாடார் உறவின்முறை நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் கொடியேற்றினார். தலைவர் சுசீந்திரன்,
முதல்வர் குமரேசன், தாளாளர் உதயசூரியன், உறவின்முறை, பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., வீர கடம்பு கோபு தேசியக்கொடி ஏற்றினார். கூடுதல் பி.டி.ஓ., முருகானந்தம் பங்கேற்றார். பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பழனிச்சாமி கொடியேற்றினார். செயல் அலுவலர் பாஸ்கரன் பங்கேற்றார்.
போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,வீரபாண்டி கொடியேற்றினார். எஸ்.பி., தனிப்பிரிவு பிரேம்குமார் பங்கேற்றார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அய்யாச்சாமி, வட்டார மருத்துவமனையில் டாக்டர் ரோஹித் கொடியேற்றினர்.
சி.சி.,குவாரி செட்டிநாடு சிமென்ட் ஆலையில் தலைவர் சிவக்குமார் கொடியேற்றினார். துணைப்பொதுமேலாளர் ஜெயபிரகாஷ்காந்த், துணை தலைமை பாதுகாப்பு அதிகாரி சிவஞான சுப்பிரமணியன் பங்கேற்றனர்.
சின்னழகு நாயக்கனுார் புதிய ஊராட்சி அலுவலகத்தில் கூடுதல் பி.டி.ஓ., முருகானந்தம் கொடியேற்றினார். பி.டி.ஓ., வீர கடம்பு கோபு, மண்டல துணை பி.டி.ஓ., சசிகலா, ஊராட்சி செயலர்(பொ) பெருமாள், துணை பி.டி.ஓ.க்கள் பழனிச்சாமி, சக்திவேல் பங்கேற்றனர்.
கூம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., வசந்தா கொடியேற்றினார். சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சுப்பிரமணி, சந்தோஷ், போலீசார் பங்கேற்றனர்.
ஆலம்பாடி சத்திரப்பட்டி காந்தி சிலை மைதானத்தில் காங்., மாவட்ட செயலாளர் ராமசாமி கொடியேற்றினார்.
டி.கூடலுார் வ.உ.சி., உயர்நிலைப்பள்ளியில் சிலம்பாட்டத்தில் வென்ற மாணவி பிரியதர்ஷினி கொடியேற்றினார். பள்ளி செயலர் சிங்காரம், உறுப்பினர் கந்தசாமி, தலைமை ஆசிரியர் அசோகன் பங்கேற்றனர்.
பழநி: பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்.எல்.ஏ., ரவி மனோகரன் தேசியக்கொடி ஏற்றினார். பழநி முருகன் கோயில் அலுவலகத்தில் இணை கமிஷனர் வெங்கடேஷ், பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் முதல்வர் ரவிசங்கர் கொடியேற்றினர்.
பழநி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் உமாமகேஸ்வரி கொடியேற்றினார். எம்.எல்.ஏ., ரவிமனோகரன், துணைத்தலைவர் கந்தசாமி பங்கேற்றனர். மா.கம்யூ., தொப்பம்பட்டி அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வன் கொடியேற்றினார்.
பழநி நேதாஜி நகர் நல சங்கம் சார்பில் உறுப்பினர் கம்பளத்தான் கொடியேற்றினார். தலைவர் சின்னச்சாமி, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சம்பத்குமார், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பழநி தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாளர் ஞானம் கொடியேற்றினார். முதல்வர் சந்திரசேகர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி ஓய்வு உதவி தலைமையாசிரியர் பொன்னுச்சாமி கொடியேற்றினார். செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் திருமலைச்சாமி தேசியக்கொடி ஏற்றினார். துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, கவுன்சிலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மீன்வளத்துறை ஆய்வாளர் முன்னாள் மாணவர் வீரமணி மாருதி கொடியேற்றினார். செயலர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா, ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் திருப்பதி கொடியேற்றினார். பள்ளிச் செயலர்கள் சுரேஷ், கண்ணன், மீனா, மாணவர்கள் பங்கேற்றனர்.
காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரங்கசாமி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமையாசிரியர் செல்வராணி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. எஸ்.பி.எம்., ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரத்தினம் கொடியேற்றினார். பள்ளிச் செயலர் சங்கீதா, மாணவர்கள் பங்கேற்றனர். பட்ஸ் சி.பி.எஸ்.இ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் கண்ணம்மாள் கொடியேற்றினார் பள்ளி முதல்வர் பொன் கார்த்திக், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம் ஒருங்கிணைந்த வர்த்தகர் சங்கம் சார்பில் நடந்த விழாவில் குழந்தைவேல் கொடியேற்றினார். செயல் தலைவர் வஞ்சிமுத்து, செயலாளர் தணிகாசலம், சங்க பிரமுகர்கள் வெங்கடாசலம், தங்கவேல், பூரணச்சந்திரன் பங்கேற்றனர்.
ஸ்ரீராமபுரம் வித் வேதா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி டாக்டர் ஷர்மிளா பாலகுரு கொடியேற்றினார். தலைவர் சாமிநாதன், தாளாளர் சித்தார்த்தன், செயலர் கவுதமன், அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா, மாணவிகள் பங்கேற்றனர்.
தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டில் சங்க செயலாளர் ராசியப்பன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினார். பொறுப்பாளர்கள் உதயம் ராமசாமி, கருப்புசாமி, கமிஷன் கடை உரிமையாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், சங்க பணியாளர்கள் பங்கேற்றனர். தொப்பக்கா வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி கொடியேற்றினார்.
கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் செல்லத்துரை தேசியக்கொடி ஏற்றினார். துணைத்தலைவர் மாயக்கண்ணன், கமிஷனர் பிரபாகரன், நகர்நல அலுவலர் அரவிந்த், பொறியாளர் செல்லத்துரை, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, போக்குவரத்து கிளை அலுவலகத்தில் மேலாளர் கார்த்திகேயன், பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரபு, ரோஜா பூங்காவில் உதவி தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி கொடியேற்றினர். ஆனந்தகிரி 6வது தெருவில் சன் லயன்ஸ் சங்க பட்டய தலைவர் ரவீந்திரன் கொடியேற்றினார். சன் அரிமா சங்கத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் ஆஷா பங்கேற்றனர்.
பண்ணைக்காடு விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் செயலாளர் பக்தானந்தா கொடியேற்றினார். முதல்வர் ரஞ்சித்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பண்ணைக்காடு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முருகேஸ்வரி கொடியேற்றினார். துணைத்தலைவர் லதா, செயல் அலுவலர் ராஜசேகர், கவுன்சிலர் பங்கேற்றனர்.
தாண்டிக்குடி மே பிளவர் மழலையர் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் தலைவர் முத்துராமலிங்கம் கொடியேற்றினர். மங்களம்கொம்பு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு தலைவர் மணிமாலா கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் கோகிலா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
