ஆசிரியர் மாறுதலை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
ஆசிரியர் மாறுதலை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
ADDED : டிச 16, 2025 07:02 AM

பட்டிவீரன்பட்டி: செங்கட்டாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் மாறுதலை கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே செங்கட்டாம்பட்டி நடுநிலைப்பள்ளியில் 1முதல் 8 வகுப்புகள் உள்ளன. இதில் 6,7,8, வகுப்புகளில் 55 மாணவர்கள் உட்பட 155 மாணவர்கள் படிக்கின்றனர்.
தொடக்க நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு உள்ள ஆசிரியர்கள் மூன்று பேரில் ஒருவர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இருவர் மட்டுமே பணி புரிகின்றனர்.
அதில் விஜய சுந்தர் என்ற ஆசிரியரை பணி மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. இதனை அறிந்த பெற்றோர்கள், மாணவர்கள் ஆசிரியரை மாறுதல் செய்யக் கூடாது என வலியுறுத்தி நேற்று காலை பள்ளி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் ஏற்கனவே தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகன் ஆசிரியர் விஜய சுந்தர் மாறுதலை நிறுத்தி மீண்டும் பள்ளிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்ற உறுதி அளித்தார். இதனை அடுத்து அரையாண்டு தேர்வினை மாணவர்கள் எழுதினர்.
