UPDATED : ஆக 19, 2026 10:00 PM
ADDED : ஆக 19, 2026 09:10 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் கல்வி மாவட்டம் நத்தம் 'சி' குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பிரிட்டோ தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் சிவா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரஹமத்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நத்தம் கார்மெல் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜூலி வரவேற்றார்.
14, 17, 19 வயது மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகளில் நத்தம் குறுவட்டத்தில் 40 பள்ளிகளின் அணிகளை சேர்ந்த 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.
ஓட்டுமொத்த சாம்பியன் மாணவர் பிரிவில் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. வங்கமனுாத்து புனித மார்சலின் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் பெற்றது.
பெண்கள் பிரிவில் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி 2ம் பெற்றது. ஏற்பாடுகளை கார்மெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெர்ரிவளன், பங்கேற்ற பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுடன் இணைந்து செய்திருந்தார்.
