UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:45 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாற்றுத்திறனாளிகள் பிரிவு தடகளப் போட்டிகளில் வேடசந்துார் கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இக்கல்லுாரி மாணவர் கனகராஜ் 100 மீ., ஓட்டப்போட்டியில் தங்கமும், மாணவர் கவிக்குமார் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். மேலும் இரு மாணவர்கள் பரிசுகளை வென்றனர். போட்டிகளில் சாதித்த மாணவர்களை கல்லுாரி முதல்வர் கற்பகம், உடற்கல்வி இயக்குனர் மருதுபாண்டி, பேராசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.
