நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : நத்தம் யூனியன் அலுவலகத்தில் ஊராட்சிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நாகராஜன் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, யூனியன் ஆணையர்கள் குமாரவேலு, மகுடபதி முன்னிலை வகித்தனர்.
ஊராட்சிகளில் நடக்கும் திட்ட பணிகள் குறித்தும், வரி வசூல் செய்வதில் பின் தங்கிய ஊராட்சிகளை கண்டறிந்து வசூல் செய்வதற்கான திட்டமிடல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.