ADDED : ஜூலை 24, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா 100வது நினைவு தினத்தை முன்னிட்டு பா.ஜ , சார்பில் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் மலர் துாவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட பொருளாளர் கருப்புசாமி, வடக்கு ஒன்றிய தலைவர் கருணாநிதி, தெற்கு ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ் குமார், வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் மதுரை வீரன், தெற்கு ஒன்றிய முன்னாள் பொதுச் செயலாளர் முத்துராமன், முன்னாள் மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட மகளிர் அணி வினோதினி, ஒன்றிய தலைவர் செந்தில் பங்கேற்றனர்.