/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டியில் தரமற்ற ரோடு பணி: வரிசை கட்டும் புகார்
/
சின்னாளபட்டியில் தரமற்ற ரோடு பணி: வரிசை கட்டும் புகார்
சின்னாளபட்டியில் தரமற்ற ரோடு பணி: வரிசை கட்டும் புகார்
சின்னாளபட்டியில் தரமற்ற ரோடு பணி: வரிசை கட்டும் புகார்
ADDED : மார் 06, 2026 05:29 AM
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பில் தரமற்ற ரோடு பணி நடப்பதாக அடுத்தடுத்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினரும் புகார் செய்வது அதிகரித்து வருகிறது.
இப்பேரூராட்சியில் உள்ள 5, 6, 12, 14, 15வது வார்டுகளில் சோமசுந்தரம் நகர் துவங்கி கருணாநிதி காலனி, மாணவர்கள் விடுதி, பொம்மையசாமி கோயில் ரோடு வரை தார் ரோடு பணிகளுக்கு டெண்டர் சமீபத்தில் விடப்பட்டது.
இப்பணிகளில் தரமற்ற ரோடு சீரமைப்புப் பணிகள் நடப்பதாகவும், பொம்மையசாமி கோயில் தெரு உள்பட பல இடங்களில் பழைய சேதமடைந்த ரோட்டை சீரமைக்காமல், பழைய ரோட்டையே சீரமைப்பதாகவும், தார் ரோடு அதிக உயரமாக அமைக்கப்படுவதால் மழைக் காலங்களில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாய சூழலில் பணி நடப்பதாக பல்வேறு தரப்பினரும் அதிருப்தியை வெளிப்படுத்துவது தொடர்கிறது.
இப்பணிகளில் முறைகேடு நடந்திருப்பது குறித்து கடந்த வாரம் பா.ஜ.,வினர் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். த.வெ.க.,வினர் இப்பிரச்னையில் முறைகேடு தவிர்க்க வலியுறுத்தியதால் இரு தரப்பினர் போலீசார் இடையே புகார் அளிக்கும் நிலை உருவானது.
தற்போது வி.சி.க., மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டி, இ.கம்யூ., மத்தியக்குழு உறுப்பினர் ராஜாமணி ஆகியோர் இதே பிரச்னை குறித்து பேரூராட்சியில் புகார் அளித்தனர். தேர்தல் நேரத்தில் தொடரும் பணி முறைகேடு புகார், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என, சம்பந்தப்பட்ட கட்சி தொண்டர்களே புலம்பும் நிலை உள்ளது.

