ADDED : செப் 29, 2026 06:22 PM
வடமதுரை, செப்.30-
வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர சார்பதிவாளர் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இங்கு கடந்த 14 ஆண்டுகளாக நிரந்தர சார்பதிவாளர் இல்லாமல் பொறுப்பு அலுவலர்களே பணிக்கு வருகின்றனர். இவர்கள் அன்றாட பத்திரங்களை மட்டுமே பதிகின்றனர். வில்லங்கம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண பதிவு போன்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் மேனுவல் வில்லங்க சான்றிதழ் கேட்ட விண்ணப்பங்கள் ஆண்டுக்கணக்கில் தேங்கின. நிரந்தர சார்பதிவாளர் கோரி பல கட்ட போராட்டங்களுக்கு பின் கடந்த ஜூலையில் நிரந்தர சார்பதிவாளர் நியமிக்கப்பட்டார். ஒரே மாதத்தில் அவரும் விடுப்பில் சென்றுவிட்டார். மீண்டும் பழைய நிலை போல பொறுப்பு அலுவலர்களே வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று அக்கப்போர் இயக்கம் சார்பில் வைக்கப்பட்ட பேனரில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வெளியிடப்பட்ட அலைபேசி எண்ணில் கூறியும் நடவடிக்கை இல்லை, அமைச்சரின் உறவினர் என்ற செல்வாக்கை பயன்படுத்தி நடக்கும் அதிகார அத்துமீறல்களுக்கு முடிவு ஏற்படுமா, ஊழலற்ற, வெளிப்படையான பத்திரப்பதிவுத்துறை வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
