நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: அகரம் பேரூராட்சி லட்சுமணன்பட்டி காலனியை சேர்ந்தவர் அருண்குமார் 30. திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை.
மனைவி பிரிந்து சென்றதால் தனியாக வாழ்ந்து வந்தார். மது போதைக்கு அடிமையான அருண்குமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
* குருநாத நாயக்கனுார் ஊராட்சி பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் தாமோதரன் 50. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.
தனியார் ஓட்டலில் வேலைக்கு சென்று வந்த தாமோதரன் தனிமையில் இருந்ததால் மன உளைச்சல் காரணமாக வீட்டருகே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிகின்றனர்.

