ADDED : பிப் 26, 2024 07:03 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : கோவை வடவள்ளி பகுதி ராமநாதன் 48.
திண்டுக்கல்லில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதி தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று மாலை அவரது அறைக்குள் காப்பாற்றுங்கள்.. என அலறல் சத்தம் கேட்டது. பக்கத்து அறைகளில் இருந்தவர்கள் ராமநாதன் மீது தீப்பற்றி எரிவதை பார்த்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அணைத்தனர். உயிருக்கு போராடிய அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரணையில் கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
