தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ' கோடைக்காய்' மா விற்பனை

 ' கோடைக்காய்' மா விற்பனை

 ' கோடைக்காய்' மா விற்பனை


ADDED : டிச 12, 2025 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரையில் 'கோடைக்காய்' என சொல்லப்படும் பருவம் அல்லாத காலத்திலும் விளையும் மாங்காய் விற்பனைக்கு வந்துள்ளது.

நுங்கு, மாங்காய் போன்றவை ஆண்டிற்கு ஒரு முறை பருவ காலத்தில் அதிகளவில் விளையும். இவையே சீசன் இல்லாத நேரத்தில் விளைவதை 'கோடைக்காய்' என குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் தற்போது சந்தைகளில் கிரேப், ருமேனியா மாங்காய் வரத்து ஏற்பட்டுள்ளது.

கிலோ ரூ.6-80க்கு விற்கப்படுகிறது. வியாபாரி மன்னார்சாமி கூறுகையில்,'' நீர் பாய்ச்சல் கிடைக்க கூடிய மா மரங்களில் மட்டும் நவம்பர், டிசம்பரிலும் மாங்காய் கிடைக்கும். இரு வாரங்களுக்கு வரத்து இருக்கும்.

இவை பழுக்காது. ஊறுகாய் தயாரிக்கவும், சமையலில் சேர்க்க மட்டும் பயன்படும். இதுபோல் கொடுக்காப்புளி, நுங்கு போன்றவையும் பருவம் இல்லாத காலங்களிலும் கிடைக்கும். இதையும் 'கோடைக்காய்' என்பர் ''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us