தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வழிகாட்டும் நகராக திண்டுக்கல்லை மாற்ற தி.மு.க.,வை ஆதரியுங்கள்; செந்தில்குமார்

வழிகாட்டும் நகராக திண்டுக்கல்லை மாற்ற தி.மு.க.,வை ஆதரியுங்கள்; செந்தில்குமார்

வழிகாட்டும் நகராக திண்டுக்கல்லை மாற்ற தி.மு.க.,வை ஆதரியுங்கள்; செந்தில்குமார்


ADDED : ஏப் 19, 2026 10:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:''தமிழகத்துக்கே வழிகாட்டும் வளர்ச்சியடைந்த நகரமாக திண்டுக்கல்லை மாற்ற தி.மு.க.,வை ஆதரியுங்கள்' என வேட்பாளர் செந்தில்குமார் பேசி ஓட்டு சேகரித்தார்.

திண்டுக்கல் தொகுதி ஆர்.எம்., காலனி, எம்.வி.எம்., நகர், பாண்டியன் நகர், கிருஷ்ணாராவ் தெரு, கிழக்கு கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

அவர் பேசியதாவது:

திண்டுக்கல்லை வளர்ச்சி அடைந்த நகராக எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும், பஸ் ஸ்டாண்ட் வேண்டும் என்ற கோரிக்கையின்படி ரூ.74.83 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்போம்.சாலைகளின் உள்கட்டமைப்பு வசதி தேவை உள்ள நிலையில் ரூ.250 கோடியில் முள்ளிப்பாடியில் இருந்து ம.மூ.கோவிலுார், பெரியக்கோட்டை, தோட்டனுாத்து, அடியனுாத்து வழியாக பஞ்சம்பட்டி செல்லும் சுற்றுச்சாலை அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது.

2 ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதியை பெற்று அந்த பணியும் முடிக்க உள்ளோம். இதுதான் திண்டுக்கல்லை வளர்ச்சியடைந்த நகராக மாற்ற நாம் எடுத்திருக்கும் முதல் அடி.

மாநிலத்துக்கே வழிகாட்ட கூடிய நகரமாக திண்டுக்கல்லை உருவாக்க தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும் என்றார்.

முன்னாள் சேர்மன் நடராஜன், ம.தி.மு.க.,செல்வராகவன், சி.பி.எம்.,அரபு, காங்கிரஸ் மணிகண்டன், வி.சி.க., மைதீன் பாவா, மேயர் இளமதி, மாநகர செயலாளர் ராஜப்பா, பொருளாளர் சரவணன், பகுதி பொறுப்பாளர் சந்தோஷ், ஜானகிராமன், மண்டல தலைவர்கள் பிலால், ஆனந்த், ஜான் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us