ADDED : நவ 21, 2026 09:49 PM
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மது போதையில் தகராறு செய்த ஏட்டுவை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., ஜெயக்குமார் இன்று (நவ.,21) உத்தரவிட்டார்.
காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அறிவழகன் 37. இவர் நிலக்கோட்டை – அணைப்பட்டி ரோடு காமாட்சிபுரம் பிரிவில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பால்பாண்டித்துரையும் 40, தனது நண்பர்களுடன் மது அருந்தினார்.
போதையில் அறிவழகனுக்கும், பாண்டித்துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனது நண்பரான டிரைவர் அருளுடன் 37, சேர்ந்து அறிவழகனை தாக்கினார். படுகாயம் அடைந்த அறிவழகன் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்த நிலையில் எஸ்.பி., ஜெயக்குமார், ஏட்டு பால்பாண்டித்துரையை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டார்.
