/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீதிமன்ற ஊழியர் இறப்பில் சந்தேகம் ; விசாரணை
/
நீதிமன்ற ஊழியர் இறப்பில் சந்தேகம் ; விசாரணை
ADDED : அக் 07, 2025 04:24 AM

வேடசந்துார்: வேடசந்துார் அருகே திண்டுக்கல் நீதிமன்ற குமஸ்தா சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நத்தம் சாணார்பட்டி ஆவிலிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 55. திண்டுக்கல் நீதிமன்றத்தில் குமஸ்தாவாக பணியாற்றி வந்தார். வேடசந்துார் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் சாலையூர் நால்ரோடு அருகே உள்ள கடை முன்பாக இரவு நேரத்தில் இறந்து கிடந்தார். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.
இவர்கள் கூறுகையில்,'' இடையகோட்டையில் நடந்த இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றவர் திரும்பி வந்தபோது இங்கே படுத்த நிலையில் இறந்துள்ளார். உடல் பரிசோதனைக்கு பின் எதனால் இறந்தார் என்பது தெரிய வரும்'' என்றனர்.