UPDATED : அக் 06, 2026 10:31 PM
ADDED : அக் 06, 2026 09:44 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 14வது தமிழக பட்டாலியன் என்.சி.சி., மாணவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சார்பில் 'துாய்மை இந்தியா' தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். திட்டமிடல் பிரிவு ரயில்வே உயர் அதிகாரிகள் சச்சின் புனேதா, சுரேஷ் பங்கேற்று பேசினர். மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு பேரணி, துாய்மை உறுதிமொழி, 4 வகையான குப்பைகள் தரம் பிரித்தல் குறித்த செயல்விளக்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதிகாரிகள் அக்பர் அலி, ரயில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை முதன்மை சுகாதார அலுவலர் மனோகரன் ஒருங்கிணைத்தார்.
