/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோவை மாவட்ட ஆதரவற்றோர் இல்லத்தினர் சுவாமி தரிசனம்
/
கோவை மாவட்ட ஆதரவற்றோர் இல்லத்தினர் சுவாமி தரிசனம்
ADDED : அக் 13, 2025 05:16 AM

பழநி, : பழநி முருகன் கோயிலுக்கு கோவையைச் சேர்ந்த ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் கலெக்டர் சரவணன் தலைமையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பழநி கோயில் மற்றும் கோவை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பல்வேறு தங்குமிடங்களில் உள்ள 90க்கும் மேற்பட்டோரை ஆன்மிக புத்துணர்ச்சி வழங்கும் வகையில் ஆன்மிக பயணமாக பழநிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தண்டபாணி நிலையத்திலிருந்து கலெக்டர் சரவணன் தலைமையில் பேட்டரி பஸ்கள் மூலம் முருகன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அன்னதானத்தில் உணவு வழங்கப்பட்டது.
அவர்களுடன் கலெக்டர் உணவு அருந்தினர். சுவாமி தரிசனம் முடிந்த பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் பிரசன்னா, தொண்டு நிறுவன நிறுவனர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.