sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சுகாதாரமின்றி செயல்படும் டீக்கடைகள், ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுங்க திறந்தவெளியில் பலகாரங்களை விற்பதால் சுகாதாரக்கேடு

ADDED : ஜன 16, 2026 06:01 AM

Google News

ADDED : ஜன 16, 2026 06:01 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் டீக்கடைகள், ஓட்டல்கள், சிக்கன், மட்டன் வருவல் கடைகள், பாஸ்ட் புட் கடைகள், பேக்கரிகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் ஒரு சில கடைகள் தவிர்த்து பெரும்பாலான கடைகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. சில கடைகளில் பலகாரங்கள் தயாரிக்கும் எண்ணெய் கருமை நிறமாக மாறும் வரை மாற்றப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்களில் தயாரிக்கப்படும் வடை, பஜ்ஜி,போண்டா, சிக்கன், மட்டன், மீன் வகைகளை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு ஏராளமான நோய்கள் ஏற்படுகிறது.

பயன்படுத்திய சமையல் எண்ணெயுடன் புதிய எண்ணெயை கலப்படம் செய்து பயன்படுத்துவது பெரிய சுகாதார ஆபத்து என கண்டறியப்பட்டுள்ளது. எண்ணெய்யை சூடாக்கி மீண்டும் பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய பாதிப்பு, நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம் , கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்கள் வராமல் இருக்க ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

இவ்வாறு செய்யப்படும் உணவுப் பொருட்கள் பல கடைகளில் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உணவுத்துறை அதிகாரிகள் அடிக்கடி பலகாரங்களின் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      Dinamalar
      Follow us