ADDED : மே 28, 2026 03:55 AM

அ நிறம் | அளவு
நத்தம்: -நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
சந்தனக்கருப்பு கோயிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் அழைத்து வர காப்பு கட்டுதல், மே 22ல் அன்னதானம், அன்று மாலை 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் பக்தர்கள் மாவிளக்கு, அக்னி சட்டி, பால்குடம், சந்தனக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
நேற்று இரவு மின்ரதத்தில் அம்மன் நகர் வலம் வர ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
