ADDED : ஏப் 08, 2026 08:40 PM

அ நிறம் | அளவு
பழநி:தமிழ் ஆண்டுகளில் இதுவரை நடந்த விசுவாவசு ஆண்டு முடிந்து ஏப்.,14ல் சித்திரை மாதப்பிறப்புடன் பராபவ ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் பராபவ ஆண்டு பஞ்சாங்கம் வெளியீட்டு விழா பழநி கலையம்புத்துார் அக்ரஹாரம் பகுதியில் நேற்று நடந்தது.
மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன் தலைமையில் பிரம்மஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சாங்கத்தை வெளியிட பாலசுப்பிரமணி பெற்றுக்கொண்டார். மாநில பொதுச்செயலாளர் வரதராஜ அய்யங்கார், பொருளாளர் அனந்தசுப்பிரமணியம், ஆலோசகர் வைத்தியநாதன், கோவை மாவட்ட தலைவர் லட்சுமிவெங்கட்ராமன், பொதுச்செயலாளர் வெங்கட்நாராயணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், சதீஷ் பங்கேற்றனர்.
