UPDATED : ஆக 04, 2026 06:34 PM
ADDED : ஆக 04, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:வேடசந்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதி தமிழ் வளர்ச்சி மன்றம் துவக்க விழா கல்லுாரியில் நடந்தது. முதல்வர் சுமதி தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் அமுதவல்லி வரவேற்றார்.
எழுத்தாளர் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் கவிவாணன், மாவட்ட செயலாளர் தாமோ, துணைத்தலைவர் சுசீலாமேரி, உறுப்பினர்கள் வைத்தியலிங்க பூபதி, பாலமுருகன், ராபர்ட் கென்னடி, வெங்கடாஜலபதி பங்கேற்று பேசினர். தமிழ்த்துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
