ADDED : ஜூலை 13, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் சுற்றுப் பகுதியில் மது, கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இப்பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற சமூக ஆர்வலரை மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் செல்வக்குமார், அமைப்பு செயலாளர் மகுடீஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் பங்கேற்றனர்.
இதனிடையே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக நிறுவனத் தலைவர் செல்வக்குமார், அமைப்பு செயலாளர் மகுடீஸ்வரன், நிர்வாகிகள் ஆண்டி, பூமி, சுந்தர் உட்பட 10 பேர்மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.