ADDED : மே 29, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி , பயிற்சி நிறுவனம் சார்பில் முதல் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை மாற்றப்பட்ட புதிய பாட நுால்களில் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ள பாடங்கள் குறித்து, கற்பித்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி இரு நாள் நடந்தது.
பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் துவக்கி வைத்தார். நிறுவன விரிவுரையாளர் ஜாவித் பயிற்சி அளித்தார். முதுநிலை விரிவுரையாளர் பரிமளா, விரிவுரையாளர் தாவீது பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.
