ADDED : செப் 06, 2026 01:45 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தின விழா முதல்வர் திலகம் தலைமையில் நடந்தது.
பள்ளி தாளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர். கல்வி, ஆசிரியர்களின் சிறப்பு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
தருமத்துப்பட்டி டி.எம்.பி., துவக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. தாளாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றனர்.
