ADDED : மார் 15, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பல்வேறு புகார்களுக்கு உள்ளான நத்தம், பரளிப்புதுார் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறுகளைச் சுட்டிக்காட்டி, நியாயமான கோரிக்கைகளுக்காக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளும் சங்க நிர்வாகிகள் உட்பட பல ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் திண்டுக்கல் கிளை சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சரவணக்குமார், முருகேசன், செல்மா.பிரியதர்ஷன், ராஜரத்தினம் பங்கேற்றனர்.

