ADDED : நவ 09, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தமிழக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் விவேகானந்தா நகரில் உள்ள மண்டபத்தில் எழுபெரும் விழா நடந்தது. மாவட்டத்தலைவர் ராஜா, செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தனர்.
பதவி உதவிபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா, தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா, மருத்துவக் கல்லுாரிக்கு உடல்தானம் வழங்க ஒப்புதல் அளித்த தலைமை ஆசிரியருக்கு விடிவெள்ளி விருது வழங்கும் விழா உள்ளிட்ட ஏழு அம்சங்களை முன்னிறுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.
மாநிலத்தலைவர் அன்பரசன், பொது செயலாளர் மாரிமுத்து பேசினர்.

