/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 04, 2025 04:26 AM

ஒட்டன்சத்திரம்: வேடசந்துார் ஒன்றியத்தில் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த அருண்குமார் மீது பெண் ஆசிரியர்கள் அளித்த பாலியல் புகார் காரணமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு நிர்வாக மாறுதலில் தேனி மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தொப்பம்பட்டி வட்டார கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்ததற்கான உத்தரவு தொடக்க கல்வி துறையால் வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாருக்கு உள்ளான அதிகாரி திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்தால் ஆசிரியர்களின் புகார் விசாரணை முறையாக நடைபெறாது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி. தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையிலான ஆசிரியர்கள் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

