நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை உணவு பாதுகாப்பு துறை சார்பில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், தொழில் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றும். இளைஞர்கள் தொழில் முனைவோராக உருமாறி பலருக்கும் வேலை வழங்குவதன் மூலம் தனக்கும், இந்த நாட்டிற்கும் உதவியாக இருக்க முடியும். நாட்டின் பொருளாதாரம் உச்ச நிலைக்கு வர வேண்டுமெனில் படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும்.
காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருகிறது '' என்றார். வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார், தொழில்நுட்ப பயிற்சியாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

