ADDED : ஜூன் 04, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் - நத்தம் ரோடு குள்ளனம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாகல்நகர் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசுப்பிரமணிசுவாமி கோயில் கும்பாபிேஷகம் நாளை (ஜூன் 5) -நடக்கிறது.
இதன் விழா நேற்று காலை 8:30 மணிக்கு மக்கள இசை, ஸ்ரீவிக்னேஷ்வ பூஜையுடன் தொடங்கியது. மாலை 5:00 மணிக்கு பிரவேச பலி, மருத்ஸங்க்ரஹனம் உட்பட பல்வேறு பூஜைகளுடன் முதல்கால யாகபூஜை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு திருமுறை, 2 ம் கால யாக பூஜை , 10:00 மணிக்கு விமான ஸ்துாபி பிரதிஷ்டை நடக்கிறது. மாலை 4:00மணிக்கு 3ம் காலை பூஜை உட்பட ேஹாமங்கள் நடக்கிறது.
நாளை காலை 9:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம் , மாலையில் உபயதாரர்களை கவுரவித்தல் நடக்கிறது. பல்வேறு ஆதினங்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.