ADDED : ஜூலை 09, 2025 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அடிவாரம் சரவணப் பொய்கை அருகே உள்ள ஸ்ரீசிவாலயம், சிவ பாலாம்பிகை, சிவகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் யாக பூஜைகள், கணபதி பூஜையுடன் துவங்கியது. ஜூலை 6ல் முதற்காலயாக பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை நடைபெற்றது.
நேற்று காலை மகா கும்பாபிஷேகம் செல்வ சுப்பிரமணிய குருக்களால் நடத்தி வைக்கப்பட்டது. சிறப்பு பூஜையுடன் சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.