ADDED : மார் 03, 2026 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சாமியார்பட்டியில் சேலைக்காரி அம்மன், கருமாரியம்மன், லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
விழாவில் தீர்த்தம் அழைப்பு, விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக, மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
கடம் புறப்பாட்டை தொடர்ந்து கருட தரிசனத்துடன் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.
சாணார்பட்டி அருகே செங்குறிச்சி மேட்டுக்களம் பாப்பாத்தி அம்மன், முருகன் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

