ADDED : மார் 29, 2026 11:17 PM
அ நிறம் | அளவு
கோபால்பட்டி:தி.வடுகபட்டி கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி பல்வேறு புனித ஸ்தலங்களின் தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது.
கணபதி பூஜை, மஹா சங்கல்பம், வாஸ்து சாந்தி, யந்திரம் ஸ்தாபனம், மருந்து சாத்துதல் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை வேதமந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.
