தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில் திருவிழாக்களால் கருப்பு ஆடுகளுக்கு கிராக்கி

 கோயில் திருவிழாக்களால் கருப்பு ஆடுகளுக்கு கிராக்கி

 கோயில் திருவிழாக்களால் கருப்பு ஆடுகளுக்கு கிராக்கி


ADDED : மார் 13, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: நேர்த்திக்கடன் செலுத்தும் கோயில் திருவிழாக்கள் அடுத்தடுத்து நடப்பதால் அய்யலுார் வாரச்சந்தையில் கருப்பு நிற ஆட்டு கிடாக்களுக்கு கூடுதல் விலை கிடைத்தன.

தக்காளி பழ கமிஷன் மண்டிகளால் புகழ் பெற்ற அய்யலுாரில் வாரச்சந்தை வியாழன்தோறும் கூடுகிறது. 10 ஆண்டுகளாக வாரச்சந்தை வளாகத்திற்குள் காலை நேரத்தில் நடக்கும் ஆடுகள் விற்பனை தனி அடையாளம் பெற்றுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்க, வாங்க அதிகளவில் வியாபாரிகள் வருகின்றனர்.

தற்போது கிராமங்களில் நேர்த்திக்கடனாக ஆட்டுக் கிடா வெட்டி வழிபாடு நடக்கும் கோயில் திருவிழாக்கள் அடுத்தடுத்து துவங்க உள்ளன. நேர்த்திக்கடன் செலுத்த விரும்புவோர் முழு கருப்பு நிறத்தில் இருக்கும் கிடாக்களை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் அய்யலுார் சந்தையில் இவ்வகை கிடாக்கள் (உயிருடன்) கிலோ ரூ.900 முதல் 1000 என்ற அளவில் விற்கப்படுகின்றன. நாட்டுக்கோழியும் வழக்கத்திற்கு மாறாக கிலோ ரூ.600 என உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us