ADDED : ஆக 29, 2026 12:52 AM

சின்னாளபட்டி: சின்னாளபட்டி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வேலுார் ஸ்ரீபுரம் பொற்கோயில் சார்பில் வழங்கப்பட்ட தன்வந்திரி பெருமாள், ராமானுஜர் சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
ஆத்துார் எம்.எல்.ஏ., பெரியசாமி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம், கிராம பொங்கல் வழிபாடு நடந்தது.
பழநி: பழநி இந்திரா நகர் கவுண்டர் இட்டேரி ரோடு பகுதியில் கன்னிமூல வலம்புரி விநாயகர், நல்ல கருப்பண்ணசாமி, வீரமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆக.,27 காலை முதல் கால பூஜை நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால பூஜைக்கு பிறகு புனிதநீர் கலசங்கள் புறப்பாடுடன் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
