ADDED : ஏப் 14, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரர் கோயில் மகா சபை கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன் தலைமையில் நடந்தது.
அறங்காவலர்கள் கணேசன், சவடமுத்து முன்னிலை வகித்தனர். கோயில் புதிய தலைவராக தண்ணீர்பந்தம்பட்டி போசப்பன், செயலாளராக மொங்குபெத்தன்பட்டி சந்திரசேகர், பொருளாளராக உசிலம்பட்டி சவடமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சித்ரா பவுர்ணமி விழா, வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

