தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தை அமாவாசை: பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்

 தை அமாவாசை: பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்

 தை அமாவாசை: பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஜன 19, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 06:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு தை அமாவாசை தினத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தரிசனம் செய்ய ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

இக்கோயிலில் தொடர் விடுமுறை, தை அமாவாசையை முன்னிட்டு வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் வெளிப் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் காத்திருந்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த குழுவாக தடுத்து நிறுத்தி, குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைத்து, மலைக்கோயில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ரோப்கார், வின்ச்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்களுக்கு நாதஸ்வர பள்ளி மாணவர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. அன்னதானம், கைக்குழந்தைகளுக்கு பால் வழங்கப் பட்டது.

பழநி கிரிவீதியில் அலகு குத்தி காவடி எடுத்து முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செய்து வந்தனர். திருஆவினன்குடி கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

அடிவாரத்தின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது.

பாதயாத்திரை பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் பஸ் ஸ்டாண்டில் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us