/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் சாரல் மழை பனியின் தாக்கம் தணிந்தது
/
'கொடை' யில் சாரல் மழை பனியின் தாக்கம் தணிந்தது
ADDED : ஜன 25, 2026 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று மாலை சாரல் மழை பெய்ததையடுத்து பனியின் தாக்கம் தணிந்தது.
சில வாரமாக சுட்டெரிக்கும் வெயிலுடன் வறண்ட வானிலை நீடித்தது. இதற்கிடையே மதியம் 3:00 மணிக்கு துவங்கும் பனியின் தாக்கம் மறுநாள் காலை 10:00 மணி வரை நீடித்து குளிர் வாட்டி வதைத்தது. நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பின் சாரல் மழை பெய்தது. கணிக்க முடியாத சீதோஷ்ண நிலையால் பொதுமக்கள், பயணிகள் செய்வதறியாது தவிர்த்தனர்.

