தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை'யில் காய்த்து குலுங்கும் நாவல் பழம்

'கொடை'யில் காய்த்து குலுங்கும் நாவல் பழம்

'கொடை'யில் காய்த்து குலுங்கும் நாவல் பழம்


UPDATED : ஆக 10, 2026 10:43 PM

ADDED : ஆக 10, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 10:43 PM ADDED : ஆக 10, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்:கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நாவல் பழ சீசன் துவங்கி உள்ளது.

இம்மலைப்பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த மலை நாவல் மரங்கள் ஏராளமாக உள்ளன. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் துவங்கும் நாவல் பழ சீசன் செப்டம்பரில் நிறைவடையும். துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு இவை ஒரு சேர உள்ள இப்பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வல்லது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்னை, வயிற்றுப்புண் உள்ளிட்டவற்றை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

ஓங்கி உயர்ந்த மரங்களில் காய்த்து குலுங்கும் நாவல் பழத்தை இங்குள்ளோர் பறித்து சுவைக்கின்றனர். மலைப்பகுதியில் விளைச்சல் காணும் நாவல் பழம் விற்பனைக்கு வருவதில்லை. நடப்பாண்டில் அதிகளவு காய்த்துள்ள இப்பபழங்கள் பறவைகளுக்கு உணவாக அமைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us