sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தட்கலில் விவசாய மின் இணைப்பு எண்ணிக்கையை...  அதிகரிக்கலாமே; தோட்டக்கலை,மலைப்பயிர் விவசாயிகள் வலியுறுத்தல்

/

தட்கலில் விவசாய மின் இணைப்பு எண்ணிக்கையை...  அதிகரிக்கலாமே; தோட்டக்கலை,மலைப்பயிர் விவசாயிகள் வலியுறுத்தல்

தட்கலில் விவசாய மின் இணைப்பு எண்ணிக்கையை...  அதிகரிக்கலாமே; தோட்டக்கலை,மலைப்பயிர் விவசாயிகள் வலியுறுத்தல்

தட்கலில் விவசாய மின் இணைப்பு எண்ணிக்கையை...  அதிகரிக்கலாமே; தோட்டக்கலை,மலைப்பயிர் விவசாயிகள் வலியுறுத்தல்

1


ADDED : ஜன 10, 2026 06:49 AM

Google News

ADDED : ஜன 10, 2026 06:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் தட்கல் சிறப்புத் திட்டத்தில் விவசாய மின் இணைப்புப் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 5 எச்.பி., குதிரைத் திறன் மின் மோட்டாருக்கு ரூ.2.5 லட்சம், 7.5 எச்.பி.,க்கு ரூ.2.75 லட்சம், 10 எச்.பி.,க்கு ரூ.3 லட்சம், 12.30 முதல் 15 எச்.பி.,க்கு ரூ.4 லட்சம் டெபாசிட் தொகை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் ஒவ்வொரு சப்டிவிஷனிலும் செயற்பொறியாளர்கள் எவ்வளவு விண்ணப்பங்கள் பெற வேண்டும் எனவும், மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற குறிப்பிட்ட எண்ணிக்கை என விபரங்கள் தெரிவிக்காமல் மின்வாரியம் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகள் பீடர் லைனுக்கு வெளியே விளை நிலம் இருந்தாலும் நிலம் உள்ள இடம் வரை மின் வழித்தடத்தை கொண்டு செல்லும் முழுச் செலவையும் மின்வாரியமே ஏற்கும். இதனால் விவசாயிகள் மத்தியில் இத்திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு ஆர்வம் அதிகரித்தது. இருப்பினும் மின்வாரியம் இலக்கு நிர்ணயித்தது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.,வை சேர்ந்த பேரூர், ஒன்றியம், நகராட்சித் தலைவர்கள் சிலர் தங்களது சிபாரிசின் அடிப்படையில் விவசாயிகளுக்கு தட்கல் நடைமுறையில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தடாலடியாக செயற்பொறியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால் செய்வதறியாது செயற்பொறியாளர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக மின்வாரியம் நிர்ணயிக்கப்பட்ட இணைப்புகளின் டெபாசிட் தொகை உடனடியாக கட்ட முடியாத விவசாயிகள் நகைகளை அடகு வைத்தும், சேமிப்பு பணத்தையும் எடுத்து இதில் முதலீடு செய்ய நினைத்திருந்தனர். ஆனால் கால அவகாசம் முடிந்த நிலையில் தட்கல் மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற கூடுதல் கால அவகாசம் வழங்க விவசாயிகள் கோரி உள்ளனர்.






      Dinamalar
      Follow us