/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருவேல முட்களால் சூழ்ந்த எட்டிக்குளம்; நீர் நிறைந்தும் நோ யூஸ்
/
கருவேல முட்களால் சூழ்ந்த எட்டிக்குளம்; நீர் நிறைந்தும் நோ யூஸ்
கருவேல முட்களால் சூழ்ந்த எட்டிக்குளம்; நீர் நிறைந்தும் நோ யூஸ்
கருவேல முட்களால் சூழ்ந்த எட்டிக்குளம்; நீர் நிறைந்தும் நோ யூஸ்
ADDED : ஜன 02, 2025 05:34 AM

குஜிலியம்பாறை: ஆர்.கோம்பை ஊராட்சியின் கடைக்கோடியில் உள்ள எட்டிக்குளம் கருவேல முட்களால் சூழ்ந்த நிலையில் இதை முறையாக துார்வாரி தண்ணீர் தேக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது ஆர்.கோம்பை ஊராட்சி. இந்த ஊராட்சியின் வடமேற்குப் எல்லைப் பகுதியில் உள்ளது எட்டி குளம். 30 ஏக்கரில் உள்ள இந்த குளத்திற்கு தொப்பியசாமி மலைப்பகுதியில் இருந்து வரும் சிற்றோடை மூலம், மழைக்காலத்தில் தண்ணீர் வருவதால் குளம் ஒவ்வொரு ஆண்டும் நிரம்பி விடுகிறது.
இந்தக் குளம் நிறைந்தால் எட்டிக்குளம், எம்.களத்துார், பேர் நாயக்கன்பட்டி, வடுகம்பாடி ஊராட்சி பகுதிகளில் போதிய நீர் ஆதாரம் கிடைக்கும். இதனால் போர்வெல்கள், கிணறுகளில் குடிநீர் பிரச்னை இருக்காது. கால்நடை வளர்ப்பு ,விவசாய தொழிலுக்கும் பாதிப்பு இல்லை.
தண்ணீர் நிறைந்த குளமாக விளங்கும் எட்டிக்குளம் கருவேல முட்கள் சூழ்ந்து கிடப்பதால் புதற்காடாகவே காட்சியளிக்கிறது. இந்த குளத்தில் உள்ள கருவேல முட்களை அகற்றி குளத்தை சுத்தப்படுத்தினால் கால்நடைகள் தண்ணீர் அருந்தவும், கால்நடைகளை குளிப்பாட்டவும், இளைஞர்கள் குளித்து விளையாடவும், மீன் பிடிக்கவும் நல்லதொரு பொழுதுபோக்கு பகுதியாக இந்த குளம் விளங்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்பகுதி மக்களின் நலன் கருதி குளத்தை முறையாக துார்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

