/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் உறை பனி வெண் கம்பளமான புல்வெளி
/
கொடைக்கானலில் உறை பனி வெண் கம்பளமான புல்வெளி
ADDED : ஜன 03, 2025 11:39 PM
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறை பனி சீசன் துவங்கிய நிலையில் வெண் கம்பளத்தை போர்த்தியது போன்று மன்னவனுார் புல்வெளி மாறியது.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு டிசம்பரில் பனி காலம் துவங்கி பிப்ரவரி வரை இருக்கும். இச்சூழலில் பகலில் வெப்பநிலை அதிகரித்து இரவில் 5 டிகிரி செல்சியஸ் கீழ் பதிவாகும்.
இந்நிலையில் கொடைக்கானல் ஏரி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மைய புல்வெளி,  கீழ்பூமி, அப்சர்வேட்டரி  உள்ளிட்ட  இடங்களில் சில நாட்களாக உறை பனி விழத்துவங்கியுள்ளது. சில நாட்களாக பகலில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ், இரவில் அதிகபட்சமாக 5 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகி வருகிறது. மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் மத்திய அரசின் செம்மறி ஆட்டுப்பண்ணை, எலும்புலக்குளம் ஆகியவற்றில் வெண் கம்பளம் போர்த்தியது போல் புல்வெளிகளில் உறை பனி  படர்ந்துள்ளது. குளிரை சமாளிக்க சுற்றுலாப்பயணிகள்,  உள்ளூர்வாசிகள் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆயத்த ஆடைகளை அணிந்து நடமாடி வருகின்றனர். மதியம் 3:00 மணிக்கு  துவங்கும் பனி மறுநாள் காலை 10 :00 மணி வரை நீடிக்கிறது.

