/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தினகரன், சசிகலாவிடம் கொள்ளையடித்த பணம் அன்று பேசிய பேச்சுக்கள் உண்மை : சீனிவாசன்
/
தினகரன், சசிகலாவிடம் கொள்ளையடித்த பணம் அன்று பேசிய பேச்சுக்கள் உண்மை : சீனிவாசன்
தினகரன், சசிகலாவிடம் கொள்ளையடித்த பணம் அன்று பேசிய பேச்சுக்கள் உண்மை : சீனிவாசன்
தினகரன், சசிகலாவிடம் கொள்ளையடித்த பணம் அன்று பேசிய பேச்சுக்கள் உண்மை : சீனிவாசன்
ADDED : ஜன 27, 2026 05:23 AM
திண்டுக்கல்: அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளையடித்த பணம் தினகரன், சசிகலாவிடம் உள்ளதாக கூறியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''அன்று பேசிய பேச்சுக்கள் உண்மை. அவர்கள் பேசியதும் உண்மை,'' என பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல்லில் சீனிவாசன் நேற்று அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிவித்த ஐந்து வாக்குறுதிகளை தொடர்ந்து அ.தி.மு.க.,வுக்கான ஓட்டுவங்கி பல மடங்கு உயர்ந்துள்ளது.
தி.மு.க.,வுக்கு தவறான வழிகளில் பணம் வருகிறது. அதை வைத்து அவர்கள் மக்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்குகிறார்கள்.
பணி நிரந்தரம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். துப்புரவு தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களை ஏன் என்று கேட்பதற்கு இங்கு நாதி இல்லை. இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி, சீட்டு தொடர்பான விஷயங்கள் அதிகாரப்பூர்வமாக பேசும் போது வெளியாகும். லாட்டரி வியாபாரி மார்டினின் மருமகன் ஊழல் பேர்வழியாக இருந்து கொண்டு ஊழல் செய்ய மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன் என அவர்கள் சொல்லும் போது சிரிப்புதான் வருகிறது என்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொள்ளையடித்த பணம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன், ஜெ., தோழி சசிகலாவிடம் இருப்பதாக கூறியிருந்தது குறித்த நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீனிவாசன், ''அன்று பேசிய பேச்சுக்கள் உண்மை. அவர்கள் பேசியதும் உண்மை. தற்போது எல்லாம் இணைந்த பின்பு முடிந்து விட்டது,'' என்றார்.
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன் இணைந்துள்ள நிலையில் சீனிவாசன் அளித்த பதில் கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

